Sunday, May 29, 2011

"வாழை" - மனத்திருப்தியின் அட்சயபாத்திரம்!!


சமீபகாலங்களில் நான் மிகுந்த மகிழ்ச்சியோடிருக்க காரணமான ஒன்றைப் பற்றி பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
அது என்னவென்றால் - வாழை!!! - It's not an NGO, but a place where we get an opportunity to do the social responsibilities.

கல்லூரி வாழ்க்கையை முடித்து, இயந்திர அலுவலக வாழ்க்கையை தொடங்கியப் பிறகு நான் வைத்த குற்றச்சாட்டுகள் - நேரம் இல்லை மற்றும் பணம் இருந்தும் மகிழ்ச்சி இல்லை (ஐயோ! இதை மறந்துவிட்டேனே ... வீட்டை விட்டு வெளியூர்ச் சென்று சம்பாரிக்கும் என்னைப் போன்றோர்க்கு "சோறு" ஒரு பெரும் கஷ்டம் ஆயிற்றே! விடு மச்சி,ஒவ்வொரு மனுசனும்கும் ஒவ்வொரு பீலிங்).

இவ்வாறு சில வருடங்கள் நகர்ந்துச் செல்ல, ஒருநாள் சத்யா வந்தேமாதரம் எனும் தங்கை-தோழியைச் சந்தித்தேன். ஆரம்பத்தில் காரணமே இல்லாமல் வெறுத்த நான், அவளை இப்பொழுதெல்லாம் காரணமே இல்லாமல் எனக்கு பிடித்து போயிற்று :-) (சில விஷயங்கள் பார்க்க பார்க்க தான் பிடிக்குமோ என்னவோ? ஹ்ம்ம் ...)

கடந்த 25 ஏப்ரல், 2010 , அன்று வாழை "நியூ மென்டர் வொர்க் ஷாப்-காக" என்னையும் சத்யா வலுக்கட்டயமாக இழுத்துச் சென்றாள். வேண்டாவெறுப்பாக சென்ற நான், பின்பு வாழை தான் வேண்டும், வாழை தான் விருப்பம் என்றாயிற்று எனக்கு.

வொர்க் ஷாப்பில் என்ன நடந்தது -   சிலப் பல விளையாட்டுகள், மலைத்தேன் எனும் மனதை உருக்கும் வீடியோ மற்றும் சைகோ மெட்ரிக் டெஸ்ட் போன்றவை. வொர்க் ஷாப் முடிந்த பிறகு, வாழையில் உடனே சேர வேண்டும் என்று மனம் கிடந்து தவித்தப் போதிலும், என்னை கதி கலங்க செய்தது இந்த சைகோ மெட்ரிக் டெஸ்ட் முடிவுகள் என்னவாயிருக்கும் என்பது. ஹி ஹி...ஆனால் பாஸ் ஆய்டோம்ல!!! வாழையிலும் சேர்ந்துட்டேன். 

சரி, வாழை என்றால் என்ன? நாங்கள் என்ன செய்கிறோம் என்று ஒரு சின்ன கண்ணோட்டம்....

வாழை, சென்னை (அனந்தபுரம் கிராமம்) மற்றும் பெங்களூரு(ஏரியூர் கிராமம்) பகுதிகளில் இயங்குகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அண்ணா அல்லது அக்கா நியமிப்போம். அவர்களோடு தொலைபேசி மற்றும் கடிதம் மூலம் தொடர்பில் இருப்போம். ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நாங்கள் (மென்டர்ஸ்) ஏரியூர்/அனந்தபுரம் சென்று எங்களின் தம்பி/தங்கைகளை (வார்ட்ஸ்) பார்த்து அவர்களுக்கு கல்வி/கல்விச்சார்ந்தவற்றைப் பற்றி கற்பிப்போம். ஆனால், நாங்கள் அவர்களிடமிருந்து கற்பவையே அதிகம் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை (நானே இவ்ளோ அறிவாளி ஆயிட்டேன்னா பாத்துகோங்க!) 


அந்த இரண்டு நாட்கள், system இல்லை, delivery இல்லை, standup, sitdown meeting இல்லை, Client call இல்லை- ஆனால் மகிழ்ச்சி மட்டுமே எங்கள் மனதில் நிரம்பி வழியும். அம்மகிழ்சியின் தாக்கம் அந்த 48 மணி நேரத்தையும் கடந்து மேலும் ஒரு வாரத்திற்கு பயணிக்கும் என்றே சொல்லலாம் :-)

இந்த பொதுநலத்தில் என்னுடைய சுயநலம் (மனத்திருப்தியை நாடி செல்லும் என் பயணம்) மேலோங்கி இருக்கிறது என்பதில் எனக்கு ஒப்புக்கொள்ள ஐயமேதுமில்லை...


இதனால் எட்டுப்பட்டிக்கும் என்ன சொல்ல வருகிறேன் என்றால்-நான் மேற்கொண்டிருக்கும் இப்பயணத்தில் உங்களைப் போன்ற சாதிக்கக்கூடிய இளைஞர்களை சகபயணியாக சந்திக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறேன். அதற்கு வாழை போன்ற இயக்கங்களில் சேருவீர்!!! 100 சதவிகிதம் கல்வியறிவு உடைய நாட்டை உருவாக்குவீர்!!!

குறிப்பு:
வாழையில் சேர விருப்பம் உள்ளோர் ஜூலை 3 ஆம் தேதி, பெங்களூரில் நடைப்பெற இருக்கும்  நியூ மென்டர் வொர்க் ஷாப்பில் கலந்து கொள்வீர்!!!
மேலும் விபரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள்.
- ரவீந்திரன் (பெங்களூரு): 9945349702 begin_of_the_skype_highlighting            9945349702      end_of_the_skype_highlighting
-முஜீப் (சென்னை): 9962284228 begin_of_the_skype_highlighting            9962284228      end_of_the_skype_highlighting.


  Have you ever said these to your child atleast once? "Be sportive while playing" . Then take a minute to read this. . Last eveni...